இலவச பிடிஎஃப் மென்பொருள்: அடிபட்டுப் போகும் குறைச் சேவையாளர்கள்.
சேமிக்கப்பட்ட ஒரு கோப்பை ஒரு கணினியிலிருந்து மற்ற கணினிக்கு எடுத்துச் செல்லும் போது அந்தக கணினியில் அதே மென்பொருள் இருந்தால் தான் அதைப் படிக்கமுடியும். உதாரணமாக MS Word-ல் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பை மற்ற கணினியில் கொண்டுபோய் படிக்க வேண்டுமானால் அல்லது அச்சு எடுக்க வேண்டுமேயானால் அதற்கு MS Word கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறையைப் போக்கவே இந்த மென்பொருள் உதவுகிறது. அதாவது பிடிஎஃப் என்பது ஆங்கிலத்தில் (PDF- Portable Document Interface) என்பதன் விரிவுரையாகும்.
இந்த பிடிஎஃப் கோப்புகளை படிக்க உதவும் மென்பொருளை "அடோப்" ஏற்கனவே இலவசமாக வழங்குகிறது. http://www.adobe.com/acrobat/ சென்று அதை பதிவிறக்கம் செய்து கொளுங்கள்.
ஆனால் இந்த பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதர்கான மென்பொருளை "அடோப்" விலைக்கே விற்று வருகிறது. இதனால் இதன் தேவை முக்கியமாகிவிட்டது. இம்மென்பொருளை சில நிறுவங்கள் Share Ware-ஆக (பாதி நாள் தான் வேலை செய்யும்) வழங்கி வந்தார்கள். சிலர் இணையம் மூலமாகவே பிடிஎஃப் கோப்புகளாக மாற்றும் முறையில் குறைந்த அளவு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் வாங்கிக் கொண்டும் குறைச்சேவை செய்து வந்தனர். ஆனால் அவர்களின் வாயில் மண் அள்ளிப்போட வந்ததுதான் இந்த பிரிமோ பிடிஎஃப்.
Active PDF என்ற நிறுவனத்தினர் பிடிஎஃப்-ஆக மாற்றும் மென்பொருளை இலவசமாகவே வழங்குகின்றனர். இதை www.primopdf.com என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பிடிஎஃப் வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றுவதற்கு Print --- Select Primo PDF என்பதனைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அத்தளத்திற்குச் செல்ல இங்கேசொடுக்கவும்.
Saturday, March 25, 2006
இலவச பிடிஎஃப் மென்பொருள்
Posted by
Albert
at
3:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல ஒரு மென் தொகுப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
If you have a open office (from SUN) you can save your document/XL in PDF format by default.It is completely free.Infact openoffice is much better than MS Office.
நீங்கள் என்ன இயங்கு தளம் உபயோகிக்கிறீர்கள் என்று தெரியவில்லை ஞான வெட்டியான் அவர்களே. notepad மற்றும் wordpad-ல் தட்டச்சு செய்து print கொடுத்த பின்பு primo pdf தேர்ந்தெடுத்து ok கொடுக்க வேண்டியது தான் வழிமுறை. ஆனால் என்னுடைய கணினியில் notepad-ல் சரியாக pdf ஆக மாறுகிறது. Acrobat Distiller-ல் தான் நீங்கள் சொல்வது போல் பிரச்சனை உண்டு.
---ஆல்பர்ட்
சாமி அவர்களே நீங்கள் சொல்வது போல் Open Office ms Office ஐ விட சிறந்தது தான். ஆனால் அதை download செய்ய 2 மணி நேரங்கள் பிடிக்குமே! அதை cd-யில் எவ்வாறு பெறுவது.
மற்றபடி உங்கள் அனைவருடைய கருத்துகளுக்கு நன்றி.
---ஆல்பர்ட்
Post a Comment