உலாவி மையங்கள்: தப்பு செய்தவர்களுக்கு ஒரு நிதி அதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு நீதி.
“சென்னையில் உலாவி மையம் (Browsing Center) தொடங்க அல்லது ஏற்கனவே வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக குறிபிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறையிடம் அனுமதி (License) பெற வேண்டும்” இது சென்னையில் புதிதாகக் கொண்டு வரப்பட்ட காவல்துறையின் சட்டம். அடுத்து உலாப வருபவர்களிடம் கண்டிப்பாக அவர்களுடைய முகவரியை பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல செயல் தான். ஆனால் தப்பு செய்ய வருகிறவன் காதில் பூ சுத்திக் கொண்டு வருவதில்லை. தவறான முகவரியைக் கொடுத்து நமக்கு பூ சுத்தி விட்டு போய்விடுவது என்பது சாதாரண விசயம். இந்த ஓட்டையை அடைக்க அதற்கு ஒரு விதிமுறை கொண்டு வரப்பட்டது. வருபவர்களிடம் அடையாள அட்டை வாங்கி, அவர் “தீவிரவாதி” இல்லை என்பதை நிறுபித்த பின்பே அனுமதிக்க வேண்டும். ஆனால் அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர்கள் இளைஞர்கள்தான். ஒரு 10 நிமிடம் உலாபுவதற்கு இவ்வளவு கெடுபிடி என்று கேட்பதால் எங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று புலம்புகிறார்கள்.
அடுத்து தனித்தனி அறைகளில் வைத்திருக்கக் கூடாது. அதில் கதவு போன்று அடைபெல்லாம் இருக்க் கூடாது. ஆனால் பெரும்பாலும் அங்கு வருபவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் கணவனுடன் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் தனிமையைக் கடைபிடிக்கக் கூடாது என்று கூறும் போது அங்கும் அவர்களின் தொழில் பாதிக்கப் படுகிறது.
இது ஒரு புறம் இருக்க ஆபாசப் படம் பார்க்கக் கூடாது என்பது நல்ல கட்டுப்பாடுதான். ஆனால் இன்றய செய்தி ஊடகங்கள் (சினிமா, வாரப்பத்திரிக்கைகள்) போன்றவை நல்ல செய்திகளைச் சொல்வதில்லையே. இளையோர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கையல்லவா பார்க்கின்றன. இதற்கிடையில் இளையோர்களின் தேடல் இணையத்தில் வந்து முடிகிறது.
இதில் பாலான தளங்களை பார்ப்பவர்களை பிடிப்பது என்பது கோழைத்தனமே! குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய இடத்தை பிடிக்கும் போது இந்த பாலான தளங்களை உருபாக்குவர்களை பிடிப்பது என்பது ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். தற்போது எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இந்த தளத்தை எந்த நாட்டிலிருந்து எந்த நேரத்தில் எத்தனை பேர் பார்வையிட்டார்கள் என்பதை கண்டு பிடித்துச் சொல்லிவிடலாம். பார்க்க தளம்: http://www.awstats.org/ மேலும் பாலான தளங்களின் வலைச் சேவையகங்களையும் (Web Server) எங்கே எந்த நாட்டில் அமைந்திருக்கிறது என்பதை கண்டறிந்து கூறிவிடலாம். அப்படியிருக்க ஏன் இந்த முரண்பாடு. ஏன் எலியை விட்டு விட்டு பூனையைப் பிடிக்க வேண்டும்? பதில் தெரிந்தவர்கள் Comments எழுதிவிட்டு போங்கள்.
Monday, March 13, 2006
Posted by Albert at 5:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த விஷயம் முக்கியமானது. இது பற்றி எனக்குத் தெரிந்துள்ள தகவல்கள் குறைவே. ஆனால் தினமலர் பத்திரிகையில் இதைப்பற்றிய என் கருத்துக்களைக் கேட்டிருந்தனர். அவர்களிடமே இதைப்பற்றி மேற்கொண்டு சில விவரங்களைக் கேட்டுக்கொண்டு என் கருத்தையும் சொன்னேன்.
இந்த நடைமுறை தமிழகம் தழுவிய ஓர் ஆணையாக அரசால் கொண்டுவரப்படவில்லை. தமக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சென்னை காவல்துறை ஆணையர் இந்த ஆணையை சென்னைக்கு மட்டும் கொண்டுவந்துள்ளார். (முதல்வரிடம் தகவல் சொல்லாமல் செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.) பிற நகரக் காவல் ஆணையர்களும் இதைப்போன்றே தத்தம் பகுதிகளுக்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கலாம்.
நாளை என் பதிவில் இதைப்பற்றிய விளக்கமான ஒரு பதிவை எழுதுகிறேன்.
Post a Comment