Free Download Manager- இது அந்த மென்பொருளின் தலைப்பு. இதை இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம். இது Share Ware கிடையாது. முற்றுலும் இலவசமாகவே வழங்குகிறார்கள்.
மிக வேகம், தகவல் இழப்பின்மை, குறைந்த இணைய வெகத்தில் கூட விரைவில் பதிவிறக்கம் செய்தல் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
சிலர் இணையம் என்பது, "யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும்" என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒருவர் தான் இந்த Free Download Manager நிறுவனத்தினர்.
இச்செயலியை பதிவிக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Saturday, April 01, 2006
இலவச பதிவிறக்க மென்பொருள்:
Posted by
Albert
at
5:27 AM
0
comments
Monday, March 27, 2006
நாற்றமடிக்கும் திருச்சிராப்பள்ளி
பகலில் நாமறிந்த, நமக்கு வழக்கமான, பெட்ரோல் வாடையத்தவிர, மற்ற பிற சிறுபாண்மை கழிவுகளின் வாடை தான் நம்முடைய சுவாசச் சுவையாகும். ஆனால் திருச்சி நகர மக்களுக்கு அப்படியில்லை. பகலில் இவைகள் என்றால் இரவில் ஒரு சுவாசச் சுவை (நாற்றம்) உருவாகி உள்ளது.
நான் இங்கு கல்லூரியில் படிக்க வந்ததிலிருந்து இரவில் இந்த வாடையை சுவாசிக்க நேரிடுகிறது. அந்த வாடை என்னவென்று தெரியவில்லை. வேப்பம் பழத்தை அதன் முத்துகளுக்காக குழியில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊற வைப்பார்கள். அப்போது அது நாட்கள் ஆக ஆக ஒரு வித வாயுவை வெளிப்படுத்தும். அந்த வாயுவின் நாற்றம் போலவே இதுவும் இருக்கிறது. ஆனால் இங்கு (திருச்சியில்) அவ்வாறு செய்தாலும் பரந்து விரிந்த நகரம் முழுவதும் நாற்றமடிப்பதற்கு வாய்பேயில்லை.
விமான நிலையம் தொடங்கி மத்திய பேருந்து நிலையம், கருனாநிதி நகர், உறையூர், பாலக்கரை, மத்தியப் பகுதிகளான தென்னூர், புத்தூர் சத்திரம் பேருந்து நிலையம், ( நான் இருப்பது சத்திரம் பேருந்து நிலையப் பகுதியான தூய வளனார் கல்லூரி வளாகம்) திருவெரம்பூர், ஸ்ரீரங்கம் சமயபுரம் டோல்கேட் வரையில் (அதற்கு அடுத்தும் இருக்கிறதா என்று தெரியவில்லை) இந்த நாற்றம் இரவில் வீசிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த நாற்றம் அனைத்து நாட்களிலும் இருப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த நாற்றாம் விடுமுறை எடுத்து விடுகிறது. இந்த முறையில் ஆராயும் போது விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பழ்கலைக் கழக பகுதிகளில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வாய்வாக இருக்கலாம். ஏனெனில் இரவில் வெளிவருவதைப் பார்த்தால் ஏதோ ஆலை முதளாளிகல் நல்ல மனசு பண்ணி இரவில் அநத வாயுவை திறந்து விடுவதை போல் தெரிகிறது. ஆனால் இதையும் உறுதியாகக் கூற முடியாது. (ஏனெனில் நாம் அங்கு சென்று நேரடியாகப் பார்க்க வில்லை. ஆராய்ச்சியாளரின் உண்மை நிறூபிக்கும் போது தான் வெற்றி பெறும்) நான் இங்கு ஆராய்ச்சியாளன் இல்லை.
காலையில் எழுந்தவுடன் வீட்டில் காபி போடுவதற்காக எரிக்கப் படும் விறகின் புகையை நாம் கண்டுகொள்ளவதில்லை. ஏதோ மரங்களை வெட்டகூடாது என்று 5, 6-ஆம் வகுப்பில் படித்துவிட்டு ஏதாவது ஒரு பேரணியில் "மரங்களை வெட்டாதே" என்று கோஷம் போட்டதோடு விட்டுவிடுகிறோம். அந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் ஒரு சிறு மாற்றம் மட்டுமே! அப்போது விறகு எரிக்கப்பட்டது இப்போது எரிநெய் (Petrol), கரிநெய் (Diesel) என்று எரிகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.
நாம் என்ன செய்ய முடியும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிழம்பி வேலைகளை முத்துவிட்டு இரவில் தூங்கப் போவதோடு மாதக்கடைசியில் சம்பளம் வாங்குவதோடு நமது சந்ததியை காப்பாற்றவே நமக்கு நேரம் சரியாய்ப் போய்விடுகிறது. இதில் எப்போது இந்த நாற்றத்தை முகர்வது அல்லது அது எங்கிருந்து வருகிறது என்று யோசிப்பது?
உண்மையில் நகரம் நரகமாகவே இருக்கிறது. இங்கு சொர்க்கம் என்பது 10 அல்லது 20 ஆயிரம் செலவழித்து குளிரூட்டி (Air conditioner) வாங்கி வைத்து கதவை அடைத்துக் கொள்பவர்களுக்கே கிட்டும். சாதாரண மக்களுக்கு நகரங்கள் திரவியம் கிடைக்கும் தொழிற்சாலை (நரகம்) மட்டுமே!
Posted by
Albert
at
5:03 AM
5
comments
Saturday, March 25, 2006
இலவச பிடிஎஃப் மென்பொருள்
இலவச பிடிஎஃப் மென்பொருள்: அடிபட்டுப் போகும் குறைச் சேவையாளர்கள்.
சேமிக்கப்பட்ட ஒரு கோப்பை ஒரு கணினியிலிருந்து மற்ற கணினிக்கு எடுத்துச் செல்லும் போது அந்தக கணினியில் அதே மென்பொருள் இருந்தால் தான் அதைப் படிக்கமுடியும். உதாரணமாக MS Word-ல் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பை மற்ற கணினியில் கொண்டுபோய் படிக்க வேண்டுமானால் அல்லது அச்சு எடுக்க வேண்டுமேயானால் அதற்கு MS Word கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறையைப் போக்கவே இந்த மென்பொருள் உதவுகிறது. அதாவது பிடிஎஃப் என்பது ஆங்கிலத்தில் (PDF- Portable Document Interface) என்பதன் விரிவுரையாகும்.
இந்த பிடிஎஃப் கோப்புகளை படிக்க உதவும் மென்பொருளை "அடோப்" ஏற்கனவே இலவசமாக வழங்குகிறது. http://www.adobe.com/acrobat/ சென்று அதை பதிவிறக்கம் செய்து கொளுங்கள்.
ஆனால் இந்த பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதர்கான மென்பொருளை "அடோப்" விலைக்கே விற்று வருகிறது. இதனால் இதன் தேவை முக்கியமாகிவிட்டது. இம்மென்பொருளை சில நிறுவங்கள் Share Ware-ஆக (பாதி நாள் தான் வேலை செய்யும்) வழங்கி வந்தார்கள். சிலர் இணையம் மூலமாகவே பிடிஎஃப் கோப்புகளாக மாற்றும் முறையில் குறைந்த அளவு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் வாங்கிக் கொண்டும் குறைச்சேவை செய்து வந்தனர். ஆனால் அவர்களின் வாயில் மண் அள்ளிப்போட வந்ததுதான் இந்த பிரிமோ பிடிஎஃப்.
Active PDF என்ற நிறுவனத்தினர் பிடிஎஃப்-ஆக மாற்றும் மென்பொருளை இலவசமாகவே வழங்குகின்றனர். இதை www.primopdf.com என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பிடிஎஃப் வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றுவதற்கு Print --- Select Primo PDF என்பதனைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அத்தளத்திற்குச் செல்ல இங்கேசொடுக்கவும்.
Posted by
Albert
at
3:20 AM
4
comments
Sunday, March 19, 2006
இணையக் கலைக் களஞ்சியம்: மைக்ரோசாப்டின் புதிய வருமானம்
இணையம் வந்த பிறகு உலகில் அனைவரின் பணிகளும் எளிதாக முடிகின்றன என்றே சொல்லலாம். மாணவர்களிலிருந்து அறிவியல் அறிஞர்கள் வரை ஒரு தகவலைத் தேட இப்போது ஆவணக் காப்பகத்தை விட இணையத்தில் வந்து தான் தேடுகின்றனர். ஆனால் இப்போது இணையதளங்களின் எண்ணிக்கை கூடி விட்டதால் தேடுபொறிகளில் தேடும் போது வெறும் குப்பைகள் தான் வந்து விழுகின்றன. இது தேடுகிறவர்களுக்கு எரிச்சலையும் கொடுத்து நேரத்தையும் வீணாக்கி விடுகிறது.
இந்த குறையைப் போக்கத்தான் "விக்கிப்பீடியா" http://wikipedia.org/ என்ற இணையக் கலைக் களஞ்சியம் (Online Encyclopedia ) வந்தது. ஆனால் அதில் எழுதுகிறவர்கள் அனைவரும் தானாக முன் வந்து கட்டுரைகளை எழுதுகிறவர்களாக இருப்பதால் இதில் அனைத்துத் தகவல்களையும் பெறுவதில் சிக்கல் வந்து விடுகிறது. அப்படியே நாம் தேடும் கடினமான தகவலை மற்றவர்கள் தந்திருப்பார்கள் என்று கூற முடியாது.
இந்தக் குறையைப் போக்க மைக்ரோசாப்ட் முந்திக்கொண்டது என்றே சொல்லலாம். அது புதிதாக "என்கார்ட்டா" "Eancarta" என்ற ஒரு புதிய இணையக் கலைக் களஞ்சியத்தை (Online Encyclopedia ) சோதனைப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
இதில் நீங்கள் தேட விரும்பும் எந்த ஒரு தகவலையும் தட்டச்சு செய்து தேடினால் தகவல் விரைவாக வந்து கிடைப்பதோடும் மட்டுமல்லாமல்., நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் கூடிய வரை கிடைத்து விடுகிறது. இதிலும் யார் வேண்டுமானலும் தகவல்களைச் சேர்க்கலாம் என்றாலும் பெரும்பாலும் முன்னதாகவே தகவல்கள் சேர்க்கப்பட்டு இருக்கும். இவ்வாறு கிடைக்கும் தகவல்களுக்கு இடையில் சிறிய அளவிலான விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (நமக்குத் தேவை மேட்டர் மட்டும் தான்) நான் கூட கல்லூரியில் இந்த பருவத்திற்கான Assignment-ஐ இதன் மூலம்தான் தேடிக்கொண்டேன்.
இணையத்தில் கால் வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த மைக்ரோசாப்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கும். எது எப்படியோ நமக்கு "என்கார்ட்டா மேட்டர் எஞ்ஜின்" கெடச்சதுல மகிழ்ச்சிதான். என்கார்ட்டா செல்ல இங்கே சொடுக்கவும்.
Posted by
Albert
at
2:41 AM
1 comments
Monday, March 13, 2006
உலாவி மையங்கள்: தப்பு செய்தவர்களுக்கு ஒரு நிதி அதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு நீதி.
“சென்னையில் உலாவி மையம் (Browsing Center) தொடங்க அல்லது ஏற்கனவே வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக குறிபிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறையிடம் அனுமதி (License) பெற வேண்டும்” இது சென்னையில் புதிதாகக் கொண்டு வரப்பட்ட காவல்துறையின் சட்டம். அடுத்து உலாப வருபவர்களிடம் கண்டிப்பாக அவர்களுடைய முகவரியை பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல செயல் தான். ஆனால் தப்பு செய்ய வருகிறவன் காதில் பூ சுத்திக் கொண்டு வருவதில்லை. தவறான முகவரியைக் கொடுத்து நமக்கு பூ சுத்தி விட்டு போய்விடுவது என்பது சாதாரண விசயம். இந்த ஓட்டையை அடைக்க அதற்கு ஒரு விதிமுறை கொண்டு வரப்பட்டது. வருபவர்களிடம் அடையாள அட்டை வாங்கி, அவர் “தீவிரவாதி” இல்லை என்பதை நிறுபித்த பின்பே அனுமதிக்க வேண்டும். ஆனால் அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர்கள் இளைஞர்கள்தான். ஒரு 10 நிமிடம் உலாபுவதற்கு இவ்வளவு கெடுபிடி என்று கேட்பதால் எங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று புலம்புகிறார்கள்.
அடுத்து தனித்தனி அறைகளில் வைத்திருக்கக் கூடாது. அதில் கதவு போன்று அடைபெல்லாம் இருக்க் கூடாது. ஆனால் பெரும்பாலும் அங்கு வருபவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் கணவனுடன் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் தனிமையைக் கடைபிடிக்கக் கூடாது என்று கூறும் போது அங்கும் அவர்களின் தொழில் பாதிக்கப் படுகிறது.
இது ஒரு புறம் இருக்க ஆபாசப் படம் பார்க்கக் கூடாது என்பது நல்ல கட்டுப்பாடுதான். ஆனால் இன்றய செய்தி ஊடகங்கள் (சினிமா, வாரப்பத்திரிக்கைகள்) போன்றவை நல்ல செய்திகளைச் சொல்வதில்லையே. இளையோர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கையல்லவா பார்க்கின்றன. இதற்கிடையில் இளையோர்களின் தேடல் இணையத்தில் வந்து முடிகிறது.
இதில் பாலான தளங்களை பார்ப்பவர்களை பிடிப்பது என்பது கோழைத்தனமே! குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய இடத்தை பிடிக்கும் போது இந்த பாலான தளங்களை உருபாக்குவர்களை பிடிப்பது என்பது ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். தற்போது எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இந்த தளத்தை எந்த நாட்டிலிருந்து எந்த நேரத்தில் எத்தனை பேர் பார்வையிட்டார்கள் என்பதை கண்டு பிடித்துச் சொல்லிவிடலாம். பார்க்க தளம்: http://www.awstats.org/ மேலும் பாலான தளங்களின் வலைச் சேவையகங்களையும் (Web Server) எங்கே எந்த நாட்டில் அமைந்திருக்கிறது என்பதை கண்டறிந்து கூறிவிடலாம். அப்படியிருக்க ஏன் இந்த முரண்பாடு. ஏன் எலியை விட்டு விட்டு பூனையைப் பிடிக்க வேண்டும்? பதில் தெரிந்தவர்கள் Comments எழுதிவிட்டு போங்கள்.
Posted by
Albert
at
5:12 AM
1 comments
Sunday, February 12, 2006
தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது
எப்படி?
தமிழில் தட்டச்சு செய்ய ஆங்கில தட்டச்சு தெரிந்தாலே போதும்!
இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
இதுதான் உண்மை.
கணினி இல்லதவர்களுக்கு,
அதற்காக நீங்கள் ஒரு சிரமமும் எடுக்க வேண்டியதில்லை. உங்களிடம் கணினி இல்லமல் வெளியே சென்று இணையத்தில் உலாபுவராக
(Browsing) இருந்தாலும் எந்த மென்பொருளையும், எழுத்துறுவையும் பதிவிறக்கம் செய்யாமலேயே தமிழில் தட்டச்சு
செய்யலாம்.
அதற்காக கீழ்வரும் இந்த சுட்டியை சொடுக்கி கிடைக்கும் "புதுவைத் தமிழ் எழுதி"யில் (இது ஒரு இணையச் செயலியாகும். இது மென்பொருள் கிடையாது) இணையத்தில் இருக்கும் (Online) போதே மேலே உள்ள கட்டத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் கீழே உள்ள கட்டத்தில் தமிழில் வார்த்தைகள் வரும்.
அதாவது உதாரணமாக,
ஆங்கிலத்தில் "ammaa" என்று தட்டச்சு செய்தால்
தமிழில் "அம்மா" என்று கிடைக்கும்.
இன்னும் பல உதாரணங்கள்:
vENdum - வேண்டும்
thamiz - தமிழ்
sarugu - சருகு
இனிமேல் "Copy" (நகல்) என்ற பொத்தானை சொடுக்கி நீங்கள் விரும்பும் மின்னஞ்சலில் கொண்டுபோய் ஒட்டி(Paste) விட்டு அனுப்பலாம். அப்படி அனுப்புவதற்கு முன் நீங்கள் தட்டச்சு செய்யும்
மின்னஞ்சல் திரையின்(Comboser Window) "உருகுறிமுறை" (Encoding) "யூனிகோடு யுடிஎப்-8" (Unicodi UTF-8) என இருக்க வேண்டும்.
அதாவது நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப தட்டச்சு செய்யும் அல்லது "Copy" செய்தவற்றை ஒட்டும் (Paste) போது உங்கள்,
- இந்டெர்னெட் எக்ஸ்ப்ளோரெர் உலாவியில் (Internet Explorer)-யில் View--- Ecoding--- Unicodi UTF-8 என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மோசில்லா பையர் பாக்ஸில் (Mozilla Firefox) View---
Character Encoding--- Unicodi UTF-8 என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். - தமிழா உலாவியில் "பார்வை--- உரு குறிமுறை--- யூனிகோர்டு (UTF-8) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகு இன்னும் ஒரு வேளை மீதம் இருக்கிறது. என்னுடைய இந்த வலைப்பதிவில் {http://www.sarugu.blogspot.com} இருக்கிற "Download Tamil Font" என்கிற தொடுப்பை சொடுக்கி வருகிற
கோப்பையும் (File) சேர்த்து இணைப்பாக (Attachment) அனுப்பி விடுங்கள். முடிந்துவிட்டது உங்கள் வேளை என்று நினைக்க வேண்டாம்! படிப்பவருக்கு ஒருவேளை உங்கள் கடிதம் (மின்னஞ்சல்) சரியாகத் தெரியவில்லையென்றால் என்ன செய்வதென்று தெரியாமல் போய்விடும். அதனால் கீழ்வரும் ஆங்கில சொற்றொடொர்களை
ஒட்டி (Paste) அனுப்பி விடுங்கள்.
"This is a Tamil mail. so this letter contains Unicode Tamil Font. Please make your Borwser View---- Encoding---- Unicode (UTF-8). Otherwise Download attachment and install Unicode
Tamil Fonts. This is a 2 minitues process so please cool"
இவ்வளவு இருக்கிறது என்று பெருமூச்சு விட்டீர்கள் என்றால் ஒன்னும் நடக்காது! ஏனெனில் இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை என்று நினைக்கிறேன். ம்ம்.. அப்புறமென்ன இனிமேல் உங்கள் பிரியமானவருக்கு இனிமேல் தமிழில் தான் கடிதம் அனுப்பப் போகிறீர்கள்....!
குறிப்பு:
புதுவை தமிழ் எழுதியின் சுட்டி (URL-Uniform Resources Locator) மிகவும் நீண்டதாக இருக்கிறதே? http://www.jaffnalibrary.com/tools/unicode.htm எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். அது ஒருமிகப்பெரிய குறையாக இருந்தாலும் நேராக என்னுடைய வலைபதிவுக்கு வந்துவிடுங்கள். இங்கே வலதுபுறத்தில் "புதுவை தமிழ்
எழுதி"-கான இணைப்பு(Link) கொடுத்துள்ளேன். அதைச் சொடுக்கி அங்கு சென்று தட்டச்சு செய்யலாம்.
கணினி உள்ளவர்களுக்கு,
இனிமேல் கணினி உள்ள்வர்களுக்கு இதெல்லாம் எளிமைதான். ஆனால் இயங்குதளத்தில்தான் பிரச்சணை இருக்கிறது. அதாவது இந்த மாதிரி தமிழில் செய்யப்படும் அனைத்து வேளைகளும் யூனிகோடு சம்மந்தப்பட்டதாக இருப்பதால் இயங்குதளம் (Operating System) என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான
கரு. அதாவது விண்டோஸின் சில வகைகளில் யூனிகோடு செயலிகள் வேலை செய்யாது.
விண்டோஸ் 98 :
விண்டோஸ் 98 உபயோகிப்பாளர்கள் யூனிகோடு செயலிகளை (Unicode Software) உபயோகிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அது பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும் கூகிளின் "யாழ்" என்ற தமிழ் தேடுபொறியிலோ அல்லது சாதாரணமாக கூகிளிளோ தேடிப்பார்க்கலாம். அதற்கான குறிச்சொல்: "விண்டோஸ் 98-ல் தமிழ்"
விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் மொழியை நிறுவுவது எப்படி?
விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்கள் தான் இங்கே ராஜா. இந்த
இயங்குதளத்தில் (விண்டோஸ் எக்ஸ்பியில்) தமிழ் மொழியும் இருக்கிறது. ஆனால் அது தானாகவே நிறுவப் பட்டிருக்காது. நாம் தான் எக்ஸ்பி நிறுவும் (Install) போது நிறுவ வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் மொழியை நிறுவ வேண்டும் என்றால் விண்டோஸ் எக்ஸ்பி உள்ள குறுந்தகடு (CD) வேண்டும் கண்டிப்பாக வேண்டும். ஆகையால் அதை முதலில் எடுத்து வைத்துக்கொண்டு நான் கீழ்கூறும் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றி
வாருங்கள்.
வழிமுறைகள்:
- Startஐ சொடுக்கி அதில் Control panelஐ தேர்வு செய்யவும்.
- இப்போது Regional and Language optionsஎன்ற
கோப்பைத்(Folder) திறக்கவும். - இதில் Languages என்ற பகுதிக்குச் சென்று அதில் காணும் supplimental Language Support என்ற பகுதியில் உள்ள Install files for complex scripts and right to left language including Thai என்ற இடத்தில் உள்ள check box-யில் ஒரு (Tick Mark)சொடுக்கு சொடுக்கிக் கொள்ளவும்.
- பிறகு OK பொத்தானை அழுத்த விண்டோஸ் எக்ஸ்பி உள்ள குறுந்தகடை உள்ளிடும்படி அறிவுறுத்தப் படும். இப்போது தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு விடும். அல்லது விண்டோஸ் எக்ஸ்பி
இயங்கு தளம் உள்ள கோப்பை ஏற்கனவே கணினியில் சேமித்து வைத்திருந்தால் அந்தக் கோப்பை (Folder) திறந்து வைத்துக் கொள்ளவும்.
தமிழை அனைத்துச் செயலிகளிலும் பயன்படுத்த:
மேலே கூறிய முறைப்படி தமிழ் மொழியை கணினியில் நிறுவியபின்
தமிழ் எழுத்துறுவை செயலிகளில் பயன்படுத்தக் கூடிய Language Bar என்ற மொழிப்பட்டை உருவாக்க வேண்டும். அதற்கு முன்னர்போல்
- Start ஐ சொடுக்கி அதில் Control Panel ஐ தேர்வு செய்யவும்.
- இப்போது Regional and Language Options என்ற
கோப்பைத்(Folder) திறக்கவும். - இதில் Languages என்ற பகுதிக்குச் சென்று அதில் Details என்ற பொத்தானை அழுத்தவும்.
- அதில் Installed Services என்ற பகுதியில் Add என்ற பொத்தானை அழுத்தவும்.
- இப்போது Input Languages என்பதற்கு Tamil என்பதனையும் Keyboard Layout/IME என்பதற்கு US என்பதனைய்ம் தெர்வு செய்து OK பொத்தானை சொடுக்கிடவும்.
இப்போது ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ளீட்டு முறையை மாற்றிக்கோள்ளும் வசதி உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். அது உங்களுடைய கணினிப் பட்டையில் கீழ்வருமாருத் தெரியும.
அதைச் சற்று சொடுக்கி எந்த மொழியில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம். தமிழைத்
தெர்ந்தெடுத்தீர்கள் என்றால் MS Office-ன் அனைத்துச் செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும். தமிழைத் தேர்ந்தெடுக்கும் போது விண்டோஸ் எக்ஸ்பி-யின் "லதா" எழுத்துறு தானாகவே தேர்ந்தெடுக்கப் பட்டுவிடும். ஆனால் தட்டச்சு செய்யும் போது கட்டம் கட்டமாகவோ அல்லது எழுத்து மாறியோதான் வரும். அதற்கு ஏதாவது ஒரு யூனிகோடு செயலி (Unicode Software) வேண்டும். அது இணையத்தில் இலவசமாகக் கிடைகிறது.
இ-கலப்பை-2.0 (யூனிகோட் தமிழ் செயலி)
இந்த யூனிகோடு செயலியின் மூலம் நான் முன்னரே கணினி இல்லாதவர்களுக்கு கூறியது போல ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது தமிழில் எழுத்துக்கள் கிடைக்கும். இதை நீங்கள் உங்கள் கணினியில் எளிதாக நிறுவிக்கொள்ள வேண்டும்.
இச்செயலியை தரவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும். அல்லது எழில்.தளம்-த்திற்குச் சென்று தரவிரக்கம் செய்யவும்.
Download E-Kalappai 2.0 (Anjal)
இந்தச் செயலியை உங்கள் கணினியில் நிறுவுவதால் எந்தவித பாதிப்பும் உங்கள் கணினிக்கு ஏற்படாது. இச்செயலியை நிருவியபின் உங்கள் கணினியின் "K" என்ற சிலைவடிவம் (Icon) வந்திருப்பதைக் காண்லாம். அதைச் சொடுக்கி யூனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய UNICODE TAMIL (Alt+2) என்பதனையும் சாதரணமாக தமிழில் தட்டச்சு செய்ய TSCIIANJAL (Alt+3) என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். தமிழ் தேவையில்லை என்றால் No keyman Keyboard (Alt+1) என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்
UNICODE TAMIL (Alt+2) என்பதை இணையப் பயன்பாட்டுக்கு உபயோயகப் படுத்த வேண்டும். அதாவது மின்ஞ்சல் அனுப்ப முதலில் Language Bari-ல் Tamil என்பதனையும் தேர்ந்தெடுத்துவிட்டுப் பிறகு இங்கே UNICODE TAMIL (Alt+2) என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகே தட்டச்சு செய்ய
வேண்டும்.
அதற்கான விளக்கப்படம் கீழே உள்ளது.
இன்மேல் உங்கள் கணினியில் தமிழிலே தட்டச்சு செய்து ஏராளமான தமிழ்க் கோப்புகளை அச்செடுக்கலாம், வலைப்பதிவில் எழுதலாம். இதன் முக்கியமான பயன் என்னவென்றால் எம்.எஸ்.ஆபீஸின் அனைத்துச் செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம் என்பதுதான்.
இந்தக் கட்டுரைக்குப் பிறகு இன்னும் ஏராளமான வலைப்பதிவுகள்
உருவாகும் என நினைக்கிறேன். அவைகள் அனைத்தும் சமுதாயத்தில் ஏதாவது ஒரு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரட்டும்.
-ஆல்பர்ட்
Posted by
Albert
at
5:03 AM
3
comments
இயங்கு எழுத்துறு என்றால் என்ன?
அது வேற ஒன்றும் இல்லை. அதாவது இணையதளங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துறுக்கள் உங்கள் கணினியில் இல்லையென்றால் அதன் எழுத்துக்கள் அனைத்தும் கட்டம் கட்டமாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ அதன் உருவம் மாறித்தெரியும். அதைத்தவிர்ப்பதற்காகவே இந்த இயங்கு எழுத்துறு
உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு இணையதளங்களில் அந்த இயங்கு எழுத்துறுவைப் பயன்படுத்தும் போது அந்த எழுத்துறுவானது உங்கள் கணினியில் இல்லையென்றாலும் அது தானகவே பதிவிறக்கமாகி திரையில் எழுத்துக்கள் அதற்கான வடிவத்திலே தெரியும்.
அதாவது "இயங்கு எழுத்துருவுடன் கூடிய இலவச தமிழ் வலைப்பதிவு:" என்ற கட்டுரைப்படி
<STYLE
>
type=text/css>
@font-face {
font-family:
TheneeUniTx;
src:
url(http://www.geocities.com/albertalbs/
THENEE.eot);
}
</STYLE>
இந்த மீயுரையில்
http://www.geocities.com/albertalbs/
THENEE.eot
என்ற சுட்டியானது TheneeUniTx என்ற எழுத்துறுவை பதிவிறக்கம் செய்து உங்கள் வலைப்பதிவில் சரியானபடி தெரியச்செய்யும். ஆனால் இது தற்காலிகமே! அதாவது அந்த எழுத்துறுவானது உங்கள் கணினிக்கே வந்துவிட்டது என்று நினைக்க வேண்ட்டாம். அது அந்த ஒரு குறிப்பிட்ட தளத்தை மட்டும் சரியான எழுத்துறுவில் காட்ட மட்டுமே அது பதிவிறக்கமாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே TheneeUniTx என்பது யூனிகோடு தமிழ் எழுத்துறுவாகும். இந்தக் கட்டுரை கிளிப்பிள்ளைக்கு
புரிந்துவிடும் என்று நினைக்கிறேன்! ஆனால் கைப்புள்ளைக்குப் புரிய வேண்டுமே.....!!?
இதுபற்றிய தகவல்களை மேலும் நீங்கள் இணையத்தில் படித்துத்
தெரிந்துகொள்ளலாம்.
- தமிழ் யுனிகோட் பற்றிய தொழில்நுட்பக்கட்டுரைகள்:
எழில்நிலா.தளம் - யுனிகோட் எழுத்துரு உதவி:
இஸ்லாம்கல்வி.தளம் - யூனிகோடு பற்றி காசி ஒரு வகுப்பே எடுத்துக் கொண்டு
இருக்கிர்றார்.
காசி.தமிழ்மணம்.தளம்
Posted by
Albert
at
4:48 AM
2
comments
Saturday, January 07, 2006
இயங்கு எழுத்துருவுடன் கூடிய இலவச தமிழ் வலைப்பதிவு:
தமிழில் இலவசமாக வலைப்பதித்தல் என்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. எளிமைதான். சிறு பிள்ளை கூட செய்யலாம். அதாவது இந்தக் கட்டுரையை படித்துப் புரிந்து கொண்டாலே போதும்.
தமிழில் இலவசமாக வலைப்பதிவு செய்வதற்கு முதலில் www.blogger.com -க்குச் சென்று அங்கு உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அங்கே அனைத்துமே இலவசம்தான்.
அடுத்து Create your blog now என்ற தொடுப்பை(Link) சொடுக்கி(click) உங்கள் விருப்பங்களைக் கொடுத்து ஒரு வலைப்பதிவை தயார் செய்துகொள்ளுங்கள்.
பிறகு Change Settings என்ற தொடுப்பை சொடுக்கி தேவையானவற்றை மாற்றங்கள் செய்ய வேண்டும். இப்போதுதான் நாம் தமிழில் வலைப்பதிவு என்ற சொல்லுக்கே வருகிறோம்.
Change Settings என்ற பகுதியில் Template-என்ற தொடுப்பை சொடுக்கி அங்கே இருக்கும் மீயுரையில்(HTML) <head>- க்கும் <title>- க்கும் உள்ள இடைப்பட்ட பகுதியில் அதாவது <head>-க்கு அடுத்தபடியாக, கீழ்வரும் இந்த மீயுரையை அங்கு ஒட்டி(paste) விடுங்கள்.
<STYLE type=text/css>
@font-face
{
font-family:
TheneeUniTx;
src:
url(http://www.geocities.com/albertalbs/THENEE.eot);
}
</STYLE%gt;
அதாவது இன்னும் விளக்கும் முகமாக அதன் இடைப்பட்டப் பகுதிகளைக் கீழே காணலாம். நீல நிறத்தில் இருப்பவை நாம் இணைத்தவை.
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD
XHTML 1.0 Strict//EN"
"http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-strict.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml"
xml:lang="en"
lang="en">
<head>
<STYLE
type=text/css>
@font-face {
font-family: TheneeUniTx;
src: url(http://www.geocities.com/albertalbs/THENEE.eot);
}
</STYLE>
<title>
<$BlogPageTitle$></title>
<$BlogMetaData$>
இன்னும் ஒரு வேளை மீதம் இருக்கிறது.
அடுத்ததாக, அந்த பகுதியில் உள்ள மீயுரைகளில், எங்கெல்லாம் font face அல்லது font:x-small/1.5em என்று இருககிறதோ அங்கெல்லாம் TheneeUniTx, Latha, TheneeUni, TSCu_Inaimathi, என்ற
இந்த எழுத்துருப் பெயரை ஒட்டி விடுங்கள்.
அதற்கான உதாரணம் கீழே: (நீல நிறத்தில் இருப்பவை நாம் இணைத்தவை)
font:x-small/1.5em "TheneeUniTx, Latha, TheneeUni, TSCu_Inaimathi, TSCu_Amuthu,
TSC_Avarangal, Trebuchet MS",Verdana,Arial,Sans-serif;
மறந்துவிடாதீர்கள்:
இதன் பிறகு கீழே வந்து Preview என்பதனைச் சொடுக்கி ஒரு (சரியாக இருக்கிறதா? என்று) முன்னோட்டம் பார்த்த பிறகு Save Template Changes என்பதனைச் சொடுக்கவும். அதன் பிறகு வரும் திரையில் Rebublish Entire Blog என்பதனைச் சொடுக்கி வெளி உலகத்திற்கு அளித்துவிடுங்கள்.
குறிப்பு:
எழுதியவற்றை Alignment செய்யும் போது Justify என்பதனைக் கொடுத்து விடாதீர்கள். அப்படிக் கொடுத்து விட்டால் Firefox Borwser-ல் சரியாகத் தெரியாது.
அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் உங்கள் வலைப்பதிவிற்கு எழுதும் போது "புதுவை தமிழ் எழுதி" என்ற யூனிகோடு எழுதியைப் பயன்படுத்தி எழுதிவிட்டு அதை இங்கே வந்து(Past) ஒட்டி விடலாம். அப்பாடா இப்போது ஒரு இயங்கு எழுத்துருவுடன் கூடிய தமிழ் வலைப்பதிவை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். இனிமேல் அதை எல்லோரும் படிக்க வேண்டுமே. என்ன செய்வது? கவலைப்படாதீர்கள்! உங்க்ளுக்காக இருக்கிறார்கள் "தமிழ் மணம்" மற்றும் "தேன்கூடு" என்ற வலைப்பதிவு சேவையாளர்கள். இந்த இருதளங்களில் ஏதாவது ஒன்றில் சென்று உங்களைப் பற்றியும் உங்கள்வலைப்பதிவைப்பற்றியும் கொடுத்து விடுங்கள். ஆனால் ஒரு முக்கிய விசயம்! அங்கே 3 கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். அதனால் ஏதாவது சமுதாயத்திற்கு உருப்படியான விசயத்தை உங்கள் வலைப்பதிவில் போட்டு வையுங்கள்.
ஏ ஐயா! கொஞ்சம் உங்கள் கருத்துக்களை எழுதிவிட்டு போங்கையா!
- ஆல்பர்ட்
Posted by
Albert
at
2:26 AM
4
comments