Monday, March 27, 2006

நாற்றமடிக்கும் திருச்சிராப்பள்ளி

பகலில் நாமறிந்த, நமக்கு வழக்கமான, பெட்ரோல் வாடையத்தவிர, மற்ற பிற சிறுபாண்மை கழிவுகளின் வாடை தான் நம்முடைய சுவாசச் சுவையாகும். ஆனால் திருச்சி நகர மக்களுக்கு அப்படியில்லை. பகலில் இவைகள் என்றால் இரவில் ஒரு சுவாசச் சுவை (நாற்றம்) உருவாகி உள்ளது.

நான் இங்கு கல்லூரியில் படிக்க வந்ததிலிருந்து இரவில் இந்த வாடையை சுவாசிக்க நேரிடுகிறது. அந்த வாடை என்னவென்று தெரியவில்லை. வேப்பம் பழத்தை அதன் முத்துகளுக்காக குழியில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊற வைப்பார்கள். அப்போது அது நாட்கள் ஆக ஆக ஒரு வித வாயுவை வெளிப்படுத்தும். அந்த வாயுவின் நாற்றம் போலவே இதுவும் இருக்கிறது. ஆனால் இங்கு (திருச்சியில்) அவ்வாறு செய்தாலும் பரந்து விரிந்த நகரம் முழுவதும் நாற்றமடிப்பதற்கு வாய்பேயில்லை.

விமான நிலையம் தொடங்கி மத்திய பேருந்து நிலையம், கருனாநிதி நகர், உறையூர், பாலக்கரை, மத்தியப் பகுதிகளான தென்னூர், புத்தூர் சத்திரம் பேருந்து நிலையம், ( நான் இருப்பது சத்திரம் பேருந்து நிலையப் பகுதியான தூய வளனார் கல்லூரி வளாகம்) திருவெரம்பூர், ஸ்ரீரங்கம் சமயபுரம் டோல்கேட் வரையில் (அதற்கு அடுத்தும் இருக்கிறதா என்று தெரியவில்லை) இந்த நாற்றம் இரவில் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த நாற்றம் அனைத்து நாட்களிலும் இருப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த நாற்றாம் விடுமுறை எடுத்து விடுகிறது. இந்த முறையில் ஆராயும் போது விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பழ்கலைக் கழக பகுதிகளில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வாய்வாக இருக்கலாம். ஏனெனில் இரவில் வெளிவருவதைப் பார்த்தால் ஏதோ ஆலை முதளாளிகல் நல்ல மனசு பண்ணி இரவில் அநத வாயுவை திறந்து விடுவதை போல் தெரிகிறது. ஆனால் இதையும் உறுதியாகக் கூற முடியாது. (ஏனெனில் நாம் அங்கு சென்று நேரடியாகப் பார்க்க வில்லை. ஆராய்ச்சியாளரின் உண்மை நிறூபிக்கும் போது தான் வெற்றி பெறும்) நான் இங்கு ஆராய்ச்சியாளன் இல்லை.

காலையில் எழுந்தவுடன் வீட்டில் காபி போடுவதற்காக எரிக்கப் படும் விறகின் புகையை நாம் கண்டுகொள்ளவதில்லை. ஏதோ மரங்களை வெட்டகூடாது என்று 5, 6-ஆம் வகுப்பில் படித்துவிட்டு ஏதாவது ஒரு பேரணியில் "மரங்களை வெட்டாதே" என்று கோஷம் போட்டதோடு விட்டுவிடுகிறோம். அந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் ஒரு சிறு மாற்றம் மட்டுமே! அப்போது விறகு எரிக்கப்பட்டது இப்போது எரிநெய் (Petrol), கரிநெய் (Diesel) என்று எரிகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.

நாம் என்ன செய்ய முடியும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிழம்பி வேலைகளை முத்துவிட்டு இரவில் தூங்கப் போவதோடு மாதக்கடைசியில் சம்பளம் வாங்குவதோடு நமது சந்ததியை காப்பாற்றவே நமக்கு நேரம் சரியாய்ப் போய்விடுகிறது. இதில் எப்போது இந்த நாற்றத்தை முகர்வது அல்லது அது எங்கிருந்து வருகிறது என்று யோசிப்பது?

உண்மையில் நகரம் நரகமாகவே இருக்கிறது. இங்கு சொர்க்கம் என்பது 10 அல்லது 20 ஆயிரம் செலவழித்து குளிரூட்டி (Air conditioner) வாங்கி வைத்து கதவை அடைத்துக் கொள்பவர்களுக்கே கிட்டும். சாதாரண மக்களுக்கு நகரங்கள் திரவியம் கிடைக்கும் தொழிற்சாலை (நரகம்) மட்டுமே!

5 comments:

said...

அப்பெல்லாம் இந்த சாரயம் காய்ச்சர வாடையும் சேர்த்தே வரும், சங்கிலியாண்டபுரம், பொன்மலை, அரியமங்கலம் (வாழக்கா தோப்பு இருந்த இடம், இப்பதான் வூடுங்களாயிடுச்சே!) பக்கமிருந்து. செம்பட்டு பக்கம் தான் இந்த தோல் பதினிடற தொழிற்சாலையிலிருந்து வரும், அதுவும் டோல்கேட் வரை தான் அப்படி இருக்கும்!

said...

டோல்கேட்டுக்கு அப்புறம் மொலாசஸ் வாடை வரும். அது கூட விடுமுறை நாட்களில் மட்டும் தான்.

said...

நான் கேள்விப்படவில்லையே
பார்ப்போம்

said...

பாமர மக்களுக்கு அது பழகி போகியிருக்கும். முடிந்தால் மூக்கை மூடிகொள்லும்,முடியாவிட்டால் ஒரு போராட்டம் பன்னும், என் பங்குக்கு நனும் வருகிறேன். அன்னிய முதலீடு,மற்றும் ஏற்றுமதி வாசத்தில் இது எங்க தெரியபோகுது.....

said...

பாமர மக்களுக்கு அது பழகி போகியிருக்கும். முடிந்தால் மூக்கை மூடிகொள்லும்,முடியாவிட்டால் ஒரு போராட்டம் பன்னும், என் பங்குக்கு நனும் வருகிறேன். அன்னிய முதலீடு,மற்றும் ஏற்றுமதி வாசத்தில் இது எங்க தெரியபோகுது.....