Monday, March 27, 2006

நாற்றமடிக்கும் திருச்சிராப்பள்ளி

பகலில் நாமறிந்த, நமக்கு வழக்கமான, பெட்ரோல் வாடையத்தவிர, மற்ற பிற சிறுபாண்மை கழிவுகளின் வாடை தான் நம்முடைய சுவாசச் சுவையாகும். ஆனால் திருச்சி நகர மக்களுக்கு அப்படியில்லை. பகலில் இவைகள் என்றால் இரவில் ஒரு சுவாசச் சுவை (நாற்றம்) உருவாகி உள்ளது.

நான் இங்கு கல்லூரியில் படிக்க வந்ததிலிருந்து இரவில் இந்த வாடையை சுவாசிக்க நேரிடுகிறது. அந்த வாடை என்னவென்று தெரியவில்லை. வேப்பம் பழத்தை அதன் முத்துகளுக்காக குழியில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊற வைப்பார்கள். அப்போது அது நாட்கள் ஆக ஆக ஒரு வித வாயுவை வெளிப்படுத்தும். அந்த வாயுவின் நாற்றம் போலவே இதுவும் இருக்கிறது. ஆனால் இங்கு (திருச்சியில்) அவ்வாறு செய்தாலும் பரந்து விரிந்த நகரம் முழுவதும் நாற்றமடிப்பதற்கு வாய்பேயில்லை.

விமான நிலையம் தொடங்கி மத்திய பேருந்து நிலையம், கருனாநிதி நகர், உறையூர், பாலக்கரை, மத்தியப் பகுதிகளான தென்னூர், புத்தூர் சத்திரம் பேருந்து நிலையம், ( நான் இருப்பது சத்திரம் பேருந்து நிலையப் பகுதியான தூய வளனார் கல்லூரி வளாகம்) திருவெரம்பூர், ஸ்ரீரங்கம் சமயபுரம் டோல்கேட் வரையில் (அதற்கு அடுத்தும் இருக்கிறதா என்று தெரியவில்லை) இந்த நாற்றம் இரவில் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த நாற்றம் அனைத்து நாட்களிலும் இருப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த நாற்றாம் விடுமுறை எடுத்து விடுகிறது. இந்த முறையில் ஆராயும் போது விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பழ்கலைக் கழக பகுதிகளில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வாய்வாக இருக்கலாம். ஏனெனில் இரவில் வெளிவருவதைப் பார்த்தால் ஏதோ ஆலை முதளாளிகல் நல்ல மனசு பண்ணி இரவில் அநத வாயுவை திறந்து விடுவதை போல் தெரிகிறது. ஆனால் இதையும் உறுதியாகக் கூற முடியாது. (ஏனெனில் நாம் அங்கு சென்று நேரடியாகப் பார்க்க வில்லை. ஆராய்ச்சியாளரின் உண்மை நிறூபிக்கும் போது தான் வெற்றி பெறும்) நான் இங்கு ஆராய்ச்சியாளன் இல்லை.

காலையில் எழுந்தவுடன் வீட்டில் காபி போடுவதற்காக எரிக்கப் படும் விறகின் புகையை நாம் கண்டுகொள்ளவதில்லை. ஏதோ மரங்களை வெட்டகூடாது என்று 5, 6-ஆம் வகுப்பில் படித்துவிட்டு ஏதாவது ஒரு பேரணியில் "மரங்களை வெட்டாதே" என்று கோஷம் போட்டதோடு விட்டுவிடுகிறோம். அந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் ஒரு சிறு மாற்றம் மட்டுமே! அப்போது விறகு எரிக்கப்பட்டது இப்போது எரிநெய் (Petrol), கரிநெய் (Diesel) என்று எரிகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.

நாம் என்ன செய்ய முடியும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிழம்பி வேலைகளை முத்துவிட்டு இரவில் தூங்கப் போவதோடு மாதக்கடைசியில் சம்பளம் வாங்குவதோடு நமது சந்ததியை காப்பாற்றவே நமக்கு நேரம் சரியாய்ப் போய்விடுகிறது. இதில் எப்போது இந்த நாற்றத்தை முகர்வது அல்லது அது எங்கிருந்து வருகிறது என்று யோசிப்பது?

உண்மையில் நகரம் நரகமாகவே இருக்கிறது. இங்கு சொர்க்கம் என்பது 10 அல்லது 20 ஆயிரம் செலவழித்து குளிரூட்டி (Air conditioner) வாங்கி வைத்து கதவை அடைத்துக் கொள்பவர்களுக்கே கிட்டும். சாதாரண மக்களுக்கு நகரங்கள் திரவியம் கிடைக்கும் தொழிற்சாலை (நரகம்) மட்டுமே!

Saturday, March 25, 2006

இலவச பிடிஎஃப் மென்பொருள்

இலவச பிடிஎஃப் மென்பொருள்: அடிபட்டுப் போகும் குறைச் சேவையாளர்கள்.

சேமிக்கப்பட்ட ஒரு கோப்பை ஒரு கணினியிலிருந்து மற்ற கணினிக்கு எடுத்துச் செல்லும் போது அந்தக கணினியில் அதே மென்பொருள் இருந்தால் தான் அதைப் படிக்கமுடியும். உதாரணமாக MS Word-ல் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பை மற்ற கணினியில் கொண்டுபோய் படிக்க வேண்டுமானால் அல்லது அச்சு எடுக்க வேண்டுமேயானால் அதற்கு MS Word கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறையைப் போக்கவே இந்த மென்பொருள் உதவுகிறது. அதாவது பிடிஎஃப் என்பது ஆங்கிலத்தில் (PDF- Portable Document Interface) என்பதன் விரிவுரையாகும்.

இந்த பிடிஎஃப் கோப்புகளை படிக்க உதவும் மென்பொருளை "அடோப்" ஏற்கனவே இலவசமாக வழங்குகிறது. http://www.adobe.com/acrobat/ சென்று அதை பதிவிறக்கம் செய்து கொளுங்கள்.

ஆனால் இந்த பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதர்கான மென்பொருளை "அடோப்" விலைக்கே விற்று வருகிறது. இதனால் இதன் தேவை முக்கியமாகிவிட்டது. இம்மென்பொருளை சில நிறுவங்கள் Share Ware-ஆக (பாதி நாள் தான் வேலை செய்யும்) வழங்கி வந்தார்கள். சிலர் இணையம் மூலமாகவே பிடிஎஃப் கோப்புகளாக மாற்றும் முறையில் குறைந்த அளவு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் வாங்கிக் கொண்டும் குறைச்சேவை செய்து வந்தனர். ஆனால் அவர்களின் வாயில் மண் அள்ளிப்போட வந்ததுதான் இந்த பிரிமோ பிடிஎஃப்.

Active PDF என்ற நிறுவனத்தினர் பிடிஎஃப்-ஆக மாற்றும் மென்பொருளை இலவசமாகவே வழங்குகின்றனர். இதை www.primopdf.com என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பிடிஎஃப் வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றுவதற்கு Print --- Select Primo PDF என்பதனைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அத்தளத்திற்குச் செல்ல இங்கேசொடுக்கவும்.

Sunday, March 19, 2006

இணையக் கலைக் களஞ்சியம்: மைக்ரோசாப்டின் புதிய வருமானம்

இணையம் வந்த பிறகு உலகில் அனைவரின் பணிகளும் எளிதாக முடிகின்றன என்றே சொல்லலாம். மாணவர்களிலிருந்து அறிவியல் அறிஞர்கள் வரை ஒரு தகவலைத் தேட இப்போது ஆவணக் காப்பகத்தை விட இணையத்தில் வந்து தான் தேடுகின்றனர். ஆனால் இப்போது இணையதளங்களின் எண்ணிக்கை கூடி விட்டதால் தேடுபொறிகளில் தேடும் போது வெறும் குப்பைகள் தான் வந்து விழுகின்றன. இது தேடுகிறவர்களுக்கு எரிச்சலையும் கொடுத்து நேரத்தையும் வீணாக்கி விடுகிறது.

இந்த குறையைப் போக்கத்தான் "விக்கிப்பீடியா" http://wikipedia.org/ என்ற இணையக் கலைக் களஞ்சியம் (Online Encyclopedia ) வந்தது. ஆனால் அதில் எழுதுகிறவர்கள் அனைவரும் தானாக முன் வந்து கட்டுரைகளை எழுதுகிறவர்களாக இருப்பதால் இதில் அனைத்துத் தகவல்களையும் பெறுவதில் சிக்கல் வந்து விடுகிறது. அப்படியே நாம் தேடும் கடினமான தகவலை மற்றவர்கள் தந்திருப்பார்கள் என்று கூற முடியாது.

இந்தக் குறையைப் போக்க மைக்ரோசாப்ட் முந்திக்கொண்டது என்றே சொல்லலாம். அது புதிதாக "என்கார்ட்டா" "Eancarta" என்ற ஒரு புதிய இணையக் கலைக் களஞ்சியத்தை (Online Encyclopedia ) சோதனைப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
இதில் நீங்கள் தேட விரும்பும் எந்த ஒரு தகவலையும் தட்டச்சு செய்து தேடினால் தகவல் விரைவாக வந்து கிடைப்பதோடும் மட்டுமல்லாமல்., நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் கூடிய வரை கிடைத்து விடுகிறது. இதிலும் யார் வேண்டுமானலும் தகவல்களைச் சேர்க்கலாம் என்றாலும் பெரும்பாலும் முன்னதாகவே தகவல்கள் சேர்க்கப்பட்டு இருக்கும். இவ்வாறு கிடைக்கும் தகவல்களுக்கு இடையில் சிறிய அளவிலான விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (நமக்குத் தேவை மேட்டர் மட்டும் தான்) நான் கூட கல்லூரியில் இந்த பருவத்திற்கான Assignment-ஐ இதன் மூலம்தான் தேடிக்கொண்டேன்.

இணையத்தில் கால் வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த மைக்ரோசாப்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கும். எது எப்படியோ நமக்கு "என்கார்ட்டா மேட்டர் எஞ்ஜின்" கெடச்சதுல மகிழ்ச்சிதான். என்கார்ட்டா செல்ல இங்கே சொடுக்கவும்.

Monday, March 13, 2006

உலாவி மையங்கள்: தப்பு செய்தவர்களுக்கு ஒரு நிதி அதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு நீதி.

“சென்னையில் உலாவி மையம் (Browsing Center) தொடங்க அல்லது ஏற்கனவே வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக குறிபிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறையிடம் அனுமதி (License) பெற வேண்டும்” இது சென்னையில் புதிதாகக் கொண்டு வரப்பட்ட காவல்துறையின் சட்டம். அடுத்து உலாப வருபவர்களிடம் கண்டிப்பாக அவர்களுடைய முகவரியை பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல செயல் தான். ஆனால் தப்பு செய்ய வருகிறவன் காதில் பூ சுத்திக் கொண்டு வருவதில்லை. தவறான முகவரியைக் கொடுத்து நமக்கு பூ சுத்தி விட்டு போய்விடுவது என்பது சாதாரண விசயம். இந்த ஓட்டையை அடைக்க அதற்கு ஒரு விதிமுறை கொண்டு வரப்பட்டது. வருபவர்களிடம் அடையாள அட்டை வாங்கி, அவர் “தீவிரவாதி” இல்லை என்பதை நிறுபித்த பின்பே அனுமதிக்க வேண்டும். ஆனால் அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர்கள் இளைஞர்கள்தான். ஒரு 10 நிமிடம் உலாபுவதற்கு இவ்வளவு கெடுபிடி என்று கேட்பதால் எங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று புலம்புகிறார்கள்.

அடுத்து தனித்தனி அறைகளில் வைத்திருக்கக் கூடாது. அதில் கதவு போன்று அடைபெல்லாம் இருக்க் கூடாது. ஆனால் பெரும்பாலும் அங்கு வருபவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் கணவனுடன் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் தனிமையைக் கடைபிடிக்கக் கூடாது என்று கூறும் போது அங்கும் அவர்களின் தொழில் பாதிக்கப் படுகிறது.

இது ஒரு புறம் இருக்க ஆபாசப் படம் பார்க்கக் கூடாது என்பது நல்ல கட்டுப்பாடுதான். ஆனால் இன்றய செய்தி ஊடகங்கள் (சினிமா, வாரப்பத்திரிக்கைகள்) போன்றவை நல்ல செய்திகளைச் சொல்வதில்லையே. இளையோர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கையல்லவா பார்க்கின்றன. இதற்கிடையில் இளையோர்களின் தேடல் இணையத்தில் வந்து முடிகிறது.

இதில் பாலான தளங்களை பார்ப்பவர்களை பிடிப்பது என்பது கோழைத்தனமே! குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய இடத்தை பிடிக்கும் போது இந்த பாலான தளங்களை உருபாக்குவர்களை பிடிப்பது என்பது ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். தற்போது எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இந்த தளத்தை எந்த நாட்டிலிருந்து எந்த நேரத்தில் எத்தனை பேர் பார்வையிட்டார்கள் என்பதை கண்டு பிடித்துச் சொல்லிவிடலாம். பார்க்க தளம்: http://www.awstats.org/ மேலும் பாலான தளங்களின் வலைச் சேவையகங்களையும் (Web Server) எங்கே எந்த நாட்டில் அமைந்திருக்கிறது என்பதை கண்டறிந்து கூறிவிடலாம். அப்படியிருக்க ஏன் இந்த முரண்பாடு. ஏன் எலியை விட்டு விட்டு பூனையைப் பிடிக்க வேண்டும்? பதில் தெரிந்தவர்கள் Comments எழுதிவிட்டு போங்கள்.