இயங்கு எழுத்துருவுடன் கூடிய இலவச தமிழ் வலைப்பதிவு: <STYLE type=text/css> THENEE.eot); <!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD xhtml1-strict.dtd"> xhtml" THENEE.eot);
தமிழில் இலவசமாக வலைப்பதித்தல் என்பது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. எளிமைதான். சிறு பிள்ளை கூட செய்யலாம். அதாவது இந்தக் கட்டுரையை படித்துப் புரிந்து கொண்டாலே போதும்.
தமிழில் இலவசமாக வலைப்பதிவு செய்வதற்கு முதலில் www.blogger.com -க்குச் சென்று அங்கு உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அங்கே அனைத்துமே இலவசம்தான்.
அடுத்து Create your blog now என்ற தொடுப்பை(Link) சொடுக்கி(click) உங்கள் விருப்பங்களைக் கொடுத்து ஒரு வலைப்பதிவை தயார் செய்துகொள்ளுங்கள்.
பிறகு Change Settings என்ற தொடுப்பை சொடுக்கி தேவையானவற்றை மாற்றங்கள் செய்ய வேண்டும். இப்போதுதான் நாம் தமிழில் வலைப்பதிவு என்ற சொல்லுக்கே வருகிறோம்.
Change Settings என்ற பகுதியில் Template-என்ற தொடுப்பை சொடுக்கி அங்கே இருக்கும் மீயுரையில்(HTML) <head>- க்கும் <title>- க்கும் உள்ள இடைப்பட்ட பகுதியில் அதாவது <head>-க்கு அடுத்தபடியாக, கீழ்வரும் இந்த மீயுரையை அங்கு ஒட்டி(paste) விடுங்கள்.
@font-face
{
font-family:
TheneeUniTx;
src:
url(http://www.geocities.com/albertalbs/
}
</STYLE%gt;
அதாவது இன்னும் விளக்கும் முகமாக அதன் இடைப்பட்டப் பகுதிகளைக் கீழே காணலாம். நீல நிறத்தில் இருப்பவை நாம் இணைத்தவை.
XHTML 1.0 Strict//EN"
"http://www.w3.org/TR/xhtml1/DTD/
<html xmlns="http://www.w3.org/1999/
xml:lang="en"
lang="en">
<head>
<STYLE
type=text/css>
@font-face {
font-family: TheneeUniTx;
src: url(http://www.geocities.com/albertalbs/
}
</STYLE>
<title>
<$BlogPageTitle$></title>
<$BlogMetaData$>
இன்னும் ஒரு வேளை மீதம் இருக்கிறது.
அடுத்ததாக, அந்த பகுதியில் உள்ள மீயுரைகளில், எங்கெல்லாம் font face அல்லது font:x-small/1.5em என்று இருககிறதோ அங்கெல்லாம் TheneeUniTx, Latha, TheneeUni, TSCu_Inaimathi, என்ற
இந்த எழுத்துருப் பெயரை ஒட்டி விடுங்கள்.
அதற்கான உதாரணம் கீழே: (நீல நிறத்தில் இருப்பவை நாம் இணைத்தவை)
font:x-small/1.5em "TheneeUniTx, Latha, TheneeUni, TSCu_Inaimathi, TSCu_Amuthu,
TSC_Avarangal, Trebuchet MS",Verdana,Arial,Sans-serif;
மறந்துவிடாதீர்கள்:
இதன் பிறகு கீழே வந்து Preview என்பதனைச் சொடுக்கி ஒரு (சரியாக இருக்கிறதா? என்று) முன்னோட்டம் பார்த்த பிறகு Save Template Changes என்பதனைச் சொடுக்கவும். அதன் பிறகு வரும் திரையில் Rebublish Entire Blog என்பதனைச் சொடுக்கி வெளி உலகத்திற்கு அளித்துவிடுங்கள்.
குறிப்பு:
எழுதியவற்றை Alignment செய்யும் போது Justify என்பதனைக் கொடுத்து விடாதீர்கள். அப்படிக் கொடுத்து விட்டால் Firefox Borwser-ல் சரியாகத் தெரியாது.
அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் உங்கள் வலைப்பதிவிற்கு எழுதும் போது "புதுவை தமிழ் எழுதி" என்ற யூனிகோடு எழுதியைப் பயன்படுத்தி எழுதிவிட்டு அதை இங்கே வந்து(Past) ஒட்டி விடலாம். அப்பாடா இப்போது ஒரு இயங்கு எழுத்துருவுடன் கூடிய தமிழ் வலைப்பதிவை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். இனிமேல் அதை எல்லோரும் படிக்க வேண்டுமே. என்ன செய்வது? கவலைப்படாதீர்கள்! உங்க்ளுக்காக இருக்கிறார்கள் "தமிழ் மணம்" மற்றும் "தேன்கூடு" என்ற வலைப்பதிவு சேவையாளர்கள். இந்த இருதளங்களில் ஏதாவது ஒன்றில் சென்று உங்களைப் பற்றியும் உங்கள்வலைப்பதிவைப்பற்றியும் கொடுத்து விடுங்கள். ஆனால் ஒரு முக்கிய விசயம்! அங்கே 3 கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். அதனால் ஏதாவது சமுதாயத்திற்கு உருப்படியான விசயத்தை உங்கள் வலைப்பதிவில் போட்டு வையுங்கள்.
ஏ ஐயா! கொஞ்சம் உங்கள் கருத்துக்களை எழுதிவிட்டு போங்கையா!
- ஆல்பர்ட்
4 comments:
நல்ல உதவி அன்பரே பலருக்கும் உத்வியாக இருக்கும்
மிகவும் உபயோகமான பதிவு
கார்த்திகேயன்
மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்று சொல்வார்கள். பால்வடியும் இந்த முகத்தின் மறு பக்கம் இத்தனை உன்னதமானதா? என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட (படித்த) தாய். உமது பெற்றோருக்கு என் வணக்கங்கள்.
எஸ் ஐ சுல்தான் மற்றும் Karthikeyan ஆகியோருக்கு எனது நன்றிகள்.
முனைவர் இறையரசன் ஐயாவுக்கு,
உங்களுடைய பாராட்டுகளுக்கு எனது நன்றிகள். இந்த என்னுடைய புகைப்படம் சிறுவயதில் (8-ஆம் வகுப்பு) எடுக்கப்பட்டது. தற்போது 20 வயது ஆவதால் அந்த பால் வடியும் முகம் இன்னும் என்னிடம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
Post a Comment