Free Download Manager- இது அந்த மென்பொருளின் தலைப்பு. இதை இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம். இது Share Ware கிடையாது. முற்றுலும் இலவசமாகவே வழங்குகிறார்கள்.
மிக வேகம், தகவல் இழப்பின்மை, குறைந்த இணைய வெகத்தில் கூட விரைவில் பதிவிறக்கம் செய்தல் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
சிலர் இணையம் என்பது, "யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும்" என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒருவர் தான் இந்த Free Download Manager நிறுவனத்தினர்.
இச்செயலியை பதிவிக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Saturday, April 01, 2006
இலவச பதிவிறக்க மென்பொருள்:
Posted by Albert at 5:27 AM 0 comments
Monday, March 27, 2006
நாற்றமடிக்கும் திருச்சிராப்பள்ளி
பகலில் நாமறிந்த, நமக்கு வழக்கமான, பெட்ரோல் வாடையத்தவிர, மற்ற பிற சிறுபாண்மை கழிவுகளின் வாடை தான் நம்முடைய சுவாசச் சுவையாகும். ஆனால் திருச்சி நகர மக்களுக்கு அப்படியில்லை. பகலில் இவைகள் என்றால் இரவில் ஒரு சுவாசச் சுவை (நாற்றம்) உருவாகி உள்ளது.
நான் இங்கு கல்லூரியில் படிக்க வந்ததிலிருந்து இரவில் இந்த வாடையை சுவாசிக்க நேரிடுகிறது. அந்த வாடை என்னவென்று தெரியவில்லை. வேப்பம் பழத்தை அதன் முத்துகளுக்காக குழியில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊற வைப்பார்கள். அப்போது அது நாட்கள் ஆக ஆக ஒரு வித வாயுவை வெளிப்படுத்தும். அந்த வாயுவின் நாற்றம் போலவே இதுவும் இருக்கிறது. ஆனால் இங்கு (திருச்சியில்) அவ்வாறு செய்தாலும் பரந்து விரிந்த நகரம் முழுவதும் நாற்றமடிப்பதற்கு வாய்பேயில்லை.
விமான நிலையம் தொடங்கி மத்திய பேருந்து நிலையம், கருனாநிதி நகர், உறையூர், பாலக்கரை, மத்தியப் பகுதிகளான தென்னூர், புத்தூர் சத்திரம் பேருந்து நிலையம், ( நான் இருப்பது சத்திரம் பேருந்து நிலையப் பகுதியான தூய வளனார் கல்லூரி வளாகம்) திருவெரம்பூர், ஸ்ரீரங்கம் சமயபுரம் டோல்கேட் வரையில் (அதற்கு அடுத்தும் இருக்கிறதா என்று தெரியவில்லை) இந்த நாற்றம் இரவில் வீசிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த நாற்றம் அனைத்து நாட்களிலும் இருப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த நாற்றாம் விடுமுறை எடுத்து விடுகிறது. இந்த முறையில் ஆராயும் போது விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பழ்கலைக் கழக பகுதிகளில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வாய்வாக இருக்கலாம். ஏனெனில் இரவில் வெளிவருவதைப் பார்த்தால் ஏதோ ஆலை முதளாளிகல் நல்ல மனசு பண்ணி இரவில் அநத வாயுவை திறந்து விடுவதை போல் தெரிகிறது. ஆனால் இதையும் உறுதியாகக் கூற முடியாது. (ஏனெனில் நாம் அங்கு சென்று நேரடியாகப் பார்க்க வில்லை. ஆராய்ச்சியாளரின் உண்மை நிறூபிக்கும் போது தான் வெற்றி பெறும்) நான் இங்கு ஆராய்ச்சியாளன் இல்லை.
காலையில் எழுந்தவுடன் வீட்டில் காபி போடுவதற்காக எரிக்கப் படும் விறகின் புகையை நாம் கண்டுகொள்ளவதில்லை. ஏதோ மரங்களை வெட்டகூடாது என்று 5, 6-ஆம் வகுப்பில் படித்துவிட்டு ஏதாவது ஒரு பேரணியில் "மரங்களை வெட்டாதே" என்று கோஷம் போட்டதோடு விட்டுவிடுகிறோம். அந்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் ஒரு சிறு மாற்றம் மட்டுமே! அப்போது விறகு எரிக்கப்பட்டது இப்போது எரிநெய் (Petrol), கரிநெய் (Diesel) என்று எரிகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.
நாம் என்ன செய்ய முடியும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிழம்பி வேலைகளை முத்துவிட்டு இரவில் தூங்கப் போவதோடு மாதக்கடைசியில் சம்பளம் வாங்குவதோடு நமது சந்ததியை காப்பாற்றவே நமக்கு நேரம் சரியாய்ப் போய்விடுகிறது. இதில் எப்போது இந்த நாற்றத்தை முகர்வது அல்லது அது எங்கிருந்து வருகிறது என்று யோசிப்பது?
உண்மையில் நகரம் நரகமாகவே இருக்கிறது. இங்கு சொர்க்கம் என்பது 10 அல்லது 20 ஆயிரம் செலவழித்து குளிரூட்டி (Air conditioner) வாங்கி வைத்து கதவை அடைத்துக் கொள்பவர்களுக்கே கிட்டும். சாதாரண மக்களுக்கு நகரங்கள் திரவியம் கிடைக்கும் தொழிற்சாலை (நரகம்) மட்டுமே!
Posted by Albert at 5:03 AM 5 comments
Saturday, March 25, 2006
இலவச பிடிஎஃப் மென்பொருள்
இலவச பிடிஎஃப் மென்பொருள்: அடிபட்டுப் போகும் குறைச் சேவையாளர்கள்.
சேமிக்கப்பட்ட ஒரு கோப்பை ஒரு கணினியிலிருந்து மற்ற கணினிக்கு எடுத்துச் செல்லும் போது அந்தக கணினியில் அதே மென்பொருள் இருந்தால் தான் அதைப் படிக்கமுடியும். உதாரணமாக MS Word-ல் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பை மற்ற கணினியில் கொண்டுபோய் படிக்க வேண்டுமானால் அல்லது அச்சு எடுக்க வேண்டுமேயானால் அதற்கு MS Word கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறையைப் போக்கவே இந்த மென்பொருள் உதவுகிறது. அதாவது பிடிஎஃப் என்பது ஆங்கிலத்தில் (PDF- Portable Document Interface) என்பதன் விரிவுரையாகும்.
இந்த பிடிஎஃப் கோப்புகளை படிக்க உதவும் மென்பொருளை "அடோப்" ஏற்கனவே இலவசமாக வழங்குகிறது. http://www.adobe.com/acrobat/ சென்று அதை பதிவிறக்கம் செய்து கொளுங்கள்.
ஆனால் இந்த பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதர்கான மென்பொருளை "அடோப்" விலைக்கே விற்று வருகிறது. இதனால் இதன் தேவை முக்கியமாகிவிட்டது. இம்மென்பொருளை சில நிறுவங்கள் Share Ware-ஆக (பாதி நாள் தான் வேலை செய்யும்) வழங்கி வந்தார்கள். சிலர் இணையம் மூலமாகவே பிடிஎஃப் கோப்புகளாக மாற்றும் முறையில் குறைந்த அளவு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் வாங்கிக் கொண்டும் குறைச்சேவை செய்து வந்தனர். ஆனால் அவர்களின் வாயில் மண் அள்ளிப்போட வந்ததுதான் இந்த பிரிமோ பிடிஎஃப்.
Active PDF என்ற நிறுவனத்தினர் பிடிஎஃப்-ஆக மாற்றும் மென்பொருளை இலவசமாகவே வழங்குகின்றனர். இதை www.primopdf.com என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பிடிஎஃப் வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றுவதற்கு Print --- Select Primo PDF என்பதனைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அத்தளத்திற்குச் செல்ல இங்கேசொடுக்கவும்.
Posted by Albert at 3:20 AM 4 comments