Sunday, February 12, 2006

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது
எப்படி?

தமிழில் தட்டச்சு செய்ய ஆங்கில தட்டச்சு தெரிந்தாலே போதும்!


இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
இதுதான் உண்மை.


கணினி இல்லதவர்களுக்கு,

அதற்காக நீங்கள் ஒரு சிரமமும் எடுக்க வேண்டியதில்லை. உங்களிடம் கணினி இல்லமல் வெளியே சென்று இணையத்தில் உலாபுவராக
(Browsing) இருந்தாலும் எந்த மென்பொருளையும், எழுத்துறுவையும் பதிவிறக்கம் செய்யாமலே
யே தமிழில் தட்டச்சு
செய்யலாம்.

அதற்காக கீழ்வரும் இந்த சுட்டியை சொடுக்கி கிடைக்கும் "புதுவைத் தமிழ் எழுதி"யில் (இது ஒரு இணையச் செயலியாகும். இது மென்பொருள் கிடையாது) இணையத்தில் இருக்கும் (Online) போதே மேலே உள்ள கட்டத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் கீழே உள்ள கட்டத்தில் தமிழில் வார்த்தைகள் வரும்.

அதாவது உதாரணமா,

ஆங்கிலத்தில் "ammaa" என்று தட்டச்சு செய்தால்
தமிழில் "அம்மா" என்று கிடைக்கும்.

இன்னும் பல உதாரணங்கள்:

vENdum - வேண்டும்

thamiz - தமிழ்
sarugu - சருகு


இனிமேல் "Copy" (நகல்) என்ற பொத்தானை சொடுக்கி நீங்கள் விரும்பும் மின்னஞ்சலில் கொண்டுபோய் ஒட்டி(Paste) விட்டு அனுப்பலாம். அப்படி அனுப்புவதற்கு முன் நீங்கள் தட்டச்சு செய்யும்
மின்னஞ்சல் திரையின்(Comboser Window) "உருகுறிமுறை" (Encoding) "யூனிகோடு யுடிஎப்-8" (Unicodi UTF-8) என இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப தட்டச்சு செய்யும் அல்லது "Copy" செய்தவற்றை ஒட்டும் (Paste) போது உங்கள்,

  • இந்டெர்னெட் எக்ஸ்ப்ளோரெர் உலாவியில் (Internet Explorer)-யில் View--- Ecoding--- Unicodi UTF-8 என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மோசில்லா பையர் பாக்ஸில் (Mozilla Firefox) View---
    Character Encoding--- Unicodi UTF-8
    என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • தமிழா உலாவியில் "பார்வை--- உரு குறிமுறை--- யூனிகோர்டு (UTF-8) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகு இன்னும் ஒரு வேளை மீதம் இருக்கிறது. என்னுடைய இந்த வலைப்பதிவில் {http://www.sarugu.blogspot.com} இருக்கிற "Download Tamil Font" என்கிற தொடுப்பை சொடுக்கி வருகிற
கோப்பையும் (File) சேர்த்து இணைப்பாக (Attachment) அனுப்பி விடுங்கள். முடிந்துவிட்டது உங்கள் வேளை என்று நினைக்க வேண்டாம்! படிப்பவருக்கு ஒருவேளை உங்கள் கடிதம் (மின்னஞ்சல்) சரியாகத் தெரியவில்லையென்றால் என்ன செய்வதென்று தெரியாமல் போய்விடும். அதனால் கீழ்வரும் ஆங்கில சொற்றொடொர்களை
ஒட்டி (Paste) அனுப்பி விடுங்கள்.


"This is a Tamil mail. so this letter contains Unicode Tamil Font. Please make your Borwser View---- Encoding---- Unicode (UTF-8). Otherwise Download attachment and install Unicode
Tamil Fonts. This is a 2 minitues process so please cool"

இவ்வளவு இருக்கிறது என்று பெருமூச்சு விட்டீர்கள் என்றால் ஒன்னும் நடக்காது! ஏனெனில் இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை என்று நினைக்கிறேன். ம்ம்.. அப்புறமென்ன இனிமேல் உங்கள் பிரியமானவருக்கு இனிமேல் தமிழில் தான் கடிதம் அனுப்பப் போகிறீர்கள்....!


குறிப்பு:

புதுவை தமிழ் எழுதியின் சுட்டி (URL-Uniform Resources Locator) மிகவும் நீண்டதாக இருக்கிறதே? http://www.jaffnalibrary.com/tools/unicode.htm எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். அது ஒருமிகப்பெரிய குறையாக இருந்தாலும் நேராக என்னுடைய வலைபதிவுக்கு வந்துவிடுங்கள். இங்கே வலதுபுறத்தில் "புதுவை தமிழ்
எழுதி"-கான இணைப்பு(Link) கொடுத்துள்ளேன். அதைச் சொடுக்கி அங்கு சென்று
தட்டச்சு செய்யலாம்.


கணினி உள்ளவர்களுக்கு,

இனிமேல் கணினி உள்ள்வர்களுக்கு இதெல்லாம் எளிமைதான். ஆனால் இயங்குதளத்தில்தான் பிரச்சணை இருக்கிறது. அதாவது இந்த மாதிரி தமிழில் செய்யப்படும் அனைத்து வேளைகளும் யூனிகோடு சம்மந்தப்பட்டதாக இருப்பதால் இயங்குதளம் (Operating System) என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான
கரு. அதாவது விண்டோஸின் சில வகைகளில் யூனிகோடு செயலிகள் வேலை செய்யாது.


விண்டோஸ் 98 :

விண்டோஸ் 98 உபயோகிப்பாளர்கள் யூனிகோடு செயலிகளை (Unicode Software) உபயோகிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அது பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும் கூகிளின் "யாழ்" என்ற தமிழ் தேடுபொறியிலோ அல்லது சாதாரணமாக கூகிளிளோ தேடிப்பார்க்கலாம். அதற்கான குறிச்சொல்: "விண்டோஸ் 98-ல் தமிழ்"

விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் மொழியை நிறுவுவது எப்படி?


விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்கள் தான் இங்கே ராஜா. இந்த
இயங்குதளத்தில் (விண்டோஸ் எக்ஸ்பியில்) தமிழ் மொழியும் இருக்கிறது. ஆனால் அது தானாகவே நிறுவப் பட்டிருக்காது. நாம் தான் எக்ஸ்பி நிறுவும் (Install) போது நிறுவ வேண்டும்.


விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் மொழியை நிறுவ வேண்டும் என்றால் விண்டோஸ் எக்ஸ்பி உள்ள குறுந்தகடு (CD) வேண்டும் கண்டிப்பாக வேண்டும். ஆகையால் அதை முதலில் எடுத்து வைத்துக்கொண்டு நான் கீழ்கூறும் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றி
வாருங்கள்.

வழிமுறைகள்:

  • Startஐ சொடுக்கி அதில் Control panelஐ தேர்வு செய்யவும்.

  • இப்போது Regional and Language optionsஎன்ற
    கோப்பைத்(Folder) திறக்கவும்.


  • இதில் Languages என்ற பகுதிக்குச் சென்று அதில் காணும் supplimental Language Support என்ற பகுதியில் உள்ள Install files for complex scripts and right to left language including Thai என்ற இடத்தில் உள்ள check box-யில் ஒரு (Tick Mark)சொடுக்கு சொடுக்கிக் கொள்ளவும்.

  • பிறகு OK பொத்தானை அழுத்த விண்டோஸ் எக்ஸ்பி உள்ள குறுந்தகடை உள்ளிடும்படி அறிவுறுத்தப் படும். இப்போது தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு விடும். அல்லது விண்டோஸ் எக்ஸ்பி
    இயங்கு தளம் உள்ள கோப்பை ஏற்கனவே கணினியில் சேமித்து வைத்திருந்தால் அந்தக் கோப்பை (Folder) திறந்து வைத்துக் கொள்ளவும்.


தமிழை அனைத்துச் செயலிகளிலும் பயன்படுத்த:

மேலே கூறிய முறைப்படி தமிழ் மொழியை கணினியில் நிறுவியபின்
தமிழ் எழுத்துறுவை செயலிகளில் பயன்படுத்தக் கூடிய Language Bar என்ற மொழிப்பட்டை உருவாக்க வேண்டும். அதற்கு முன்னர்போல்



  • Start ஐ சொடுக்கி அதில் Control Panel ஐ தேர்வு செய்யவும்.

  • இப்போது Regional and Language Options என்ற
    கோப்பைத்(Folder) திறக்கவும்.

  • இதில் Languages என்ற பகுதிக்குச் சென்று அதில் Details என்ற பொத்தானை அழுத்தவும்.

  • அதில் Installed Services என்ற பகுதியில் Add என்ற பொத்தானை அழுத்தவும்.

  • இப்போது Input Languages என்பதற்கு Tamil என்பதனையும் Keyboard Layout/IME என்பதற்கு US என்பதனைய்ம் தெர்வு செய்து OK பொத்தானை சொடுக்கிடவும்.


இப்போது ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ளீட்டு முறையை மாற்றிக்கோள்ளும் வசதி உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். அது உங்களுடைய கணினிப் பட்டையில் கீழ்வருமாருத் தெரியும.





அதைச் சற்று சொடுக்கி எந்த மொழியில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம். தமிழைத்
தெர்ந்தெடுத்தீர்கள் என்றால் MS Office-ன் அனைத்துச் செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும். தமிழைத் தேர்ந்தெடுக்கும் போது விண்டோஸ் எக்ஸ்பி-யின் "லதா" எழுத்துறு தானாகவே தேர்ந்தெடுக்கப் பட்டுவிடும். ஆனால் தட்டச்சு செய்யும் போது கட்டம் கட்டமாகவோ அல்லது எழுத்து மாறியோதான் வரும். அதற்கு ஏதாவது ஒரு யூனிகோடு செயலி (Unicode Software) வேண்டும். அது இணையத்தில் இலவசமாகக் கிடைகிறது.


இ-கலப்பை-2.0 (யூனிகோட் தமிழ் செயலி)


இந்த யூனிகோடு செயலியின் மூலம் நான் முன்னரே கணினி இல்லாதவர்களுக்கு கூறியது போல ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது தமிழில் எழுத்துக்கள் கிடைக்கும். இதை நீங்கள் உங்கள் கணினியில் எளிதாக நிறுவிக்கொள்ள வேண்டும்.


இச்செயலியை தரவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும். அல்லது எழில்.தளம்-த்திற்குச் சென்று தரவிரக்கம் செய்யவும்.

Download E-Kalappai 2.0 (Anjal)


இந்தச் செயலியை உங்கள் கணினியில் நிறுவுவதால் எந்தவித பாதிப்பும் உங்கள் கணினிக்கு ஏற்படாது. இச்செயலியை நிருவியபின் உங்கள் கணினியின் "K" என்ற சிலைவடிவம் (Icon) வந்திருப்பதைக் காண்லாம். அதைச் சொடுக்கி யூனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய UNICODE TAMIL (Alt+2) என்பதனையும் சாதரணமாக தமிழில் தட்டச்சு செய்ய TSCIIANJAL (Alt+3) என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். தமிழ் தேவையில்லை என்றால் No keyman Keyboard (Alt+1) என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்


UNICODE TAMIL (Alt+2) என்பதை இணையப் பயன்பாட்டுக்கு உபயோயகப் படுத்த வேண்டும். அதாவது மின்ஞ்சல் அனுப்ப முதலில் Language Bari-ல் Tamil என்பதனையும் தேர்ந்தெடுத்துவிட்டுப் பிறகு இங்கே UNICODE TAMIL (Alt+2) என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகே தட்டச்சு செய்ய
வேண்டும்.


அதற்கான விளக்கப்படம் கீழே உள்ளது.





இன்மேல் உங்கள் கணினியில் தமிழிலே தட்டச்சு செய்து ஏராளமான தமிழ்க் கோப்புகளை அச்செடுக்கலாம், வலைப்பதிவில் எழுதலாம். இதன் முக்கியமான பயன் என்னவென்றால் எம்.எஸ்.ஆபீஸின் அனைத்துச் செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம் என்பதுதான்.


இந்தக் கட்டுரைக்குப் பிறகு இன்னும் ஏராளமான வலைப்பதிவுகள்
உருவாகும் என நினைக்கிறேன். அவைகள் அனைத்தும் சமுதாயத்தில் ஏதாவது ஒரு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரட்டும்.


-ஆல்பர்ட்






இயங்கு எழுத்துறு என்றால் என்ன?

அது வேற ஒன்றும் இல்லை. அதாவது இணையதளங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துறுக்கள் உங்கள் கணினியில் இல்லையென்றால் அதன் எழுத்துக்கள் அனைத்தும் கட்டம் கட்டமாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ அதன் உருவம் மாறித்தெரியும். அதைத்தவிர்ப்பதற்காகவே இந்த இயங்கு எழுத்துறு
உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு இணையதளங்களில் அந்த இயங்கு எழுத்துறுவைப் பயன்படுத்தும் போது அந்த எழுத்துறுவானது உங்கள் கணினியில் இல்லையென்றாலும் அது தானகவே பதிவிறக்கமாகி திரையில் எழுத்துக்கள் அதற்கான வடிவத்திலே தெரியும்.

அதாவது "இயங்கு எழுத்துருவுடன் கூடிய இலவச தமிழ் வலைப்பதிவு:" என்ற கட்டுரைப்படி

<STYLE
>
type=text/css>
@font-face {
font-family:
TheneeUniTx;
src:
url(http://www.geocities.com/

albertalbs/

THENEE.eot);
}
</STYLE>




இந்த மீயுரையில்

http://www.geocities.com/albertalbs/
THENEE.eot
என்ற சுட்டியானது TheneeUniTx என்ற எழுத்துறுவை பதிவிறக்கம் செய்து உங்கள் வலைப்பதிவில் சரியானபடி தெரியச்செய்யும். ஆனால் இது தற்காலிகமே! அதாவது அந்த எழுத்துறுவானது உங்கள் கணினிக்கே வந்துவிட்டது என்று நினைக்க வேண்ட்டாம். அது அந்த ஒரு குறிப்பிட்ட தளத்தை மட்டும் சரியான எழுத்துறுவில் காட்ட மட்டுமே அது பதிவிறக்கமாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே TheneeUniTx என்பது யூனிகோடு தமிழ் எழுத்துறுவாகும். இந்தக் கட்டுரை கிளிப்பிள்ளைக்கு
புரிந்துவிடும் என்று நினைக்கிறேன்! ஆனால் கைப்புள்ளைக்குப் புரிய வேண்டுமே.....!!?

இதுபற்றிய தகவல்களை மேலும் நீங்கள் இணையத்தில் படித்துத்
தெரிந்துகொள்ளலாம்.